நெல்லை: ஆற்று மணல் கடத்திய கேரள பிஷப் உட்பட 5 பாதிரியார்கள் கைது!
நெல்லையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த கத்தோலிக்க பிஷப் மற்றும் 5 பாதிரியார்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த கத்தோலிக்க பிஷப் மற்றும் 5 பாதிரியார்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே பொட்டல் கிராமம் உள்ளது. அங்கு பத்தனம்திட்டா கத்தோலிக்க சபைக்கு சொந்தமான நிலம் உள்ளது. அங்கு கேரள மாநில பாதிரியார் மனுவேல் ஜார்ஜ், எம்.சாண்ட் தயாரிக்கின்ற ஆலையை நடத்தி வந்தார். எம்.சாண்ட் தயாரிப்பதற்காக கூறி அங்கிருந்து 27 ஆயிரம் கியூபிக் மீட்டர் ஆற்று மணல் கடத்தியுள்ளனர். இது தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் பாதிரியார் மனுவேல் ஜார்ஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
மேலும், நிறுவனத்திற்கு சேரன் மகாதேவி உதவி ஆட்சியர் பிரதீக் தயார் ரூ.9.50 கோடி ரூபாய் அபராதம் விதித்தார். இது தொடர்பாக கடந்த 2021 ஜூலையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கேரள மாநிலம், பத்தனம்திட்டாவை சேர்ந்த பிஷப் சாமுவேல், மார் இரோனஸ் மற்றும் 5 பாதிரியார்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Source, Image Courtesy: Dinamalar