டெங்கு கொசுப்புழு.. தடுக்கும் பணியில் நெல்லை மாநகராட்சி ஊழியர்கள்.!

டெங்கு கொசுப்புழு.. தடுக்கும் பணியில் நெல்லை மாநகராட்சி ஊழியர்கள்.!

Update: 2020-12-19 11:14 GMT

நெல்லையில் டெங்கு கொசுப்புழு அதிகரிப்பதாக பொதுமக்கள் மாநகராட்சியிடம் முறையிட்டனர். இதனையடுத்து முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

அதன் அடிப்படையில் மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவுப்படி, மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, பாளை மண்டல உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த் ஆலோசனை படி சுகாதார அலுவலர் ஷாகுல் ஹமீது மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில்  பாளையங்கோட்டை மகாராஜா நகர் பகுதிகளில் டெங்கு கொசுப்புழு தடுப்பு நடவடிக்கையாக கொசுக்கள் உற்பத்தியாவதற்கு முக்கிய ஆதாரங்களாக இருக்கும் டயர்கள், தேவையற்ற பிளாஸ்டிக் கலன்கள் முதலியவை  அகற்றப்பட்டு வருகின்றன.

இதற்காக வீடு வீடாக சென்று புகை மருந்து அடிக்கப்பட்டது. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Similar News