தூய்மை பணியாளர்களுக்கு நோய் தடுப்பு பொருட்கள் வழங்கிய நெல்லை மாநகராட்சி.!

முககவசம் மற்றும் சானிடைசர்கள் உள்ளிட்ட பொருட்கள் மாநகராட்சி மற்றும் நகராட்சி சார்பாக அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

Update: 2021-04-28 03:13 GMT

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இடையில் கடுமையாக போராடி வருபவர்கள் முன்களப்பணியாளர்கள். அதில் குறிப்பாக தூய்மை பணியாளர்களின் பணி மிகவும் மகத்தானது என்றே கூறலாம். தங்களின் உயிர்களை பற்றி கவலைப்படாமல் தினமும் பொதுமக்களுக்காக உழைத்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் முககவசம் மற்றும் சானிடைசர்கள் உள்ளிட்ட பொருட்கள் மாநகராட்சி மற்றும் நகராட்சி சார்பாக அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.


 



இந்நிலையில், நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவு படி, இன்று பாளை மண்டலத்தில் பணியாற்றும் 250 தூய்மை பணியாளர்களுக்கு கையுறை, சானிடைசர், முக கவசம், சோப்பு ஆகியவை வழங்கப்பட்டது.

மேலும் அனைத்து பணியாளர்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. அப்போது உடன் மேற்பார்வையாளர் முருகன், சண்முகம் மற்றும் தூய்மை பணியாளர்கள் பலர் இருந்தனர்.

Similar News