திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்.!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் சூழலில், பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்டம் தோறும் அரசு எடுத்து வருகிறது.

Update: 2021-03-22 04:50 GMT

தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் சூழலில், பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்டம் தோறும் அரசு எடுத்து வருகிறது.

இதனிடையே கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுப்பதற்காக திருநெல்வேலி மருத்துவமனை வளாகம் வெளிப்புறம் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்க மாநகராட்சி ஆணையர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.


 



அதன்படி நெல்லை மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனை படி, பாளை உதவி ஆணையர் பிரேம் ஆனந்த் சுகாதார அலுவலர் அரசகுமார் மேற்பார்வையில் அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் வெளிப்புற பகுதிகளில் கிருமி நாசினி தொடர்ந்து தெளிக்கபட்டு வருகிறது.

மேலும், கடைகளுக்கு முன்பா சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்காக வட்டம் போடப்பட்டுள்ளது. முககவசம் அணியாதவர்களுக்கு கட்டாயமாக அபராதம் வசூலிக்கப்படுகிறது.


 



எனவே பொதுமக்கள் கட்டாயமாக முககவசம் அணிந்து, அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து, கொரோனா தொற்றை விரட்டியடிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொண்டுள்ளனர்.

Similar News