சென்னை தினத்தை கொண்டாட மாநகராட்சி புதிய முயற்சி - எப்படி தெரியுமா?
சென்னை தினத்தை கொண்டாட மாநகராட்சி புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது.
சென்னை தினத்தை வரவேற்கும் வகையில் தற்போது சென்னை மாநகராட்சி இதற்கான புதிய ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. சென்னை தினத்தை கொண்டாடும் வகையில் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் ஆகஸ்டு 20 மற்றும் 21 ஆகிய நாட்களில் பொதுமக்கள் அனைவருக்கும் பொது நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக அரசு தரப்பில் தற்போது தெரிவிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் சென்னை பட்டணம் 153 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 383 ஆண்டுகளில் சென்னை மாநகரமாக மாறிய பல்வேறு வளர்ச்சி அடைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 22ஆம் தேதியை தான் நாம் சென்னை தினமாக கொண்டாடி கொண்டிருக்கிறோம்.
அந்த வகையில் வருகின்ற ஆகஸ்ட் 2ஆம் தேதி யை சிறப்பிக்கும் வகையில் தான் சென்னை மாநகராட்சி இந்த ஒரு புதிய ஏற்பாடு செய்துள்ளது. 1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22-ஆம் நாள் தான் மெட்ராஸ் நம்முடைய சென்னை பெருநகரம் உருவாகியது. இதனை சிறப்பிக்கும் வகையில் இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து சென்னை தினத்தை பெசண்ட் நகர் உள்ள கடற்கரை சாலையில் மாலை மூன்று முப்பது மணி முதல் இரவு 11 30 மணி வரை பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கொண்டாடப்பட உள்ளன.
இந்த நிகழ்ச்சிகளில் ஏற்பாடு செய்திருக்கும் பல்வேறு அம்சங்கள் நம்முடைய சென்னையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிக்கொணரும் வகையில் அமைய உள்ளதாகவும் நிகழ்ச்சிகள் அமைப்பினர் சார்பில் கூறப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் மற்றும் உணவு, சிற்றுண்டி விற்பனை கடைகள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் சார்பில் தடுப்பூசி முகாம், இயற்கை உர விற்பனை கடைகளில் அமைக்கப்பட உள்ளன. இந்த பிரமாண்டத்தை வரவேற்பதற்கு அனைத்து மக்களும் சென்னை மாநகராட்சி நாள் வரவேற்கப்பட்டு உள்ளார்கள்.
Input & Image courtesy: News