கமிஷன் வேலைகளால் பறிபோகும் மக்கள் வரிப்பணம் - யார் காரணம்?
தரமற்ற முறையில் போடப்பட்டதால் மூன்றே நாள்களில் இடிந்து விழுந்த புதிய கான்கிரீட் வடிகால் கால்வாய்.
புதிய அரசு பதவி ஏற்றதிலிருந்து பல்வேறு குளறுபடிகள் அரங்கேறி வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் ஏதேனும் ஒரு பகுதிகளில் இத்தகைய குறைபாடுகள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்த வகையில் தற்போது தரமாற்ற முறையில் போடப்பட்ட கான்கிரீட் வடிகால் கால்வாய் ஆனது மூன்றே நாட்களில் இடிந்து விழுந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள பகுதியில் தான் இந்த சம்பவம் தற்போது அரங்கேறி உள்ளது.
உளுந்தூர்பேட்டை அருகில் பெரும்பாக்கம் என்ற பகுதி இந்த பகுதியில் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் கான்கிரீட் வடிகால் கால்வாய் அமைப்பதற்கான வேலைகள் அரசாங்கத்தின் சார்பாக நடைபெற்று வந்தது. மேலும் இந்த வேலைக்காக அரசாங்கம் நிர்ணயித்த தொகை 8 லட்சத்தி 68 ஆயிரம் ரூபாய் ஆகும் ஆனால் இவ்வளவு செலவு செய்து கால்வாய் அமைத்தும் அது சிறிது நாட்களில் இடிந்து விழுந்தது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த பணியின் போது குறைந்த அளவு சிமெண்ட் அதிக அளவு மணல் கலக்கப்பட்டு இந்த சிமெண்ட் வடிகால் அமைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக நேற்று பெய்த மழையில் மணல் அடித்து செல்லப்பட்டு கால்வாய் முழுவதுமாக இடிந்து விழுந்தது. இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுப்பார்களா என்பது மக்களின் பெரும் கேள்வியாக இருந்து வருகிறது.
Input & Image courtesy: Polimer News