முதலமைச்சருக்கு வாழ்த்து.. ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சியாக பா.ம.க. செயல்படும்.. ராமதாஸ்.!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றுள்ளார். அவருக்கு பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.;

Update: 2021-05-07 05:03 GMT

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றுள்ளார். அவருக்கு பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தமிழ்நாட்டின் 12-ஆவது முதலமைச்சராக பதவியேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் எனது வாழ்த்துகள். (விமர்சனம் செய்தல்), (ஆக்கப்பூர்வமான யோசனைகளைக் கூறுதல்), (புதிய திட்டங்களை உருவாக்கி அரசுக்கு அளித்தல்) என்று வகுத்துக் கொண்ட இலக்கணங்களுக்கு ஏற்ப பாட்டாளி மக்கள் கட்சி மக்கள் நலன் காக்கும் வகையில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Similar News