புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது: எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் இன்று (நவம்பர் 23) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதற்கு வாய்ப்பு இருப்பதாக, இவை மேற்கு வடமேற்கு திசையில் நகர தொடங்கி, இலங்கைக்கும், தென்தமிழகத்துக்கும் இடையில் கரையை கடக்கலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.

Update: 2021-11-23 02:32 GMT

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் இன்று (நவம்பர் 23) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதற்கு வாய்ப்பு இருப்பதாக, இவை மேற்கு வடமேற்கு திசையில் நகர தொடங்கி, இலங்கைக்கும், தென்தமிழகத்துக்கும் இடையில் கரையை கடக்கலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.

இதனால் வருகின்ற நாட்களில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யலாம் எனவும், டெல்டா மற்றும் தென்மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை மையம் கூறியுள்ளது.

ஏற்கனவே இதற்கு முன்னர் வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பல மாவட்டங்கள் வெள்ளத்தால் மூழ்கியிருந்தது. தற்போது மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் எவ்வளவு மழை பெய்யும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News