தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அடுத்த மாதம் அமல் - தவிப்பில் மக்கள்

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அடுத்த மாதம் முதல் அமலாக்கிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்.

Update: 2022-09-09 04:40 GMT

தமிழகத்தில் மின் கட்டண உயர் அடுத்த மாதம் அக்டோபர் முதல் அமலாக்கிறது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருக்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு செந்தில் பாலாஜி அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வதற்கு சார்ஜ் பாயிண்ட் அமைப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக 100 இடங்களில் வாகன நிறுத்தம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் அதை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. அதன் பயன்பாடு மற்றும் வரவேற்பு தொடர்ந்து பல பணிகள் மேலும் விரிவு படுத்தப்படும்.


மேலும் மின்சார கட்டணம் உயர்வுக்கு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் விரைவில் கிடைக்க உள்ளது. இதன் காரணமாக திருத்தப்பட்ட புதிய மின் கட்டணத்தை அடுத்த மாதம் முதல் அமல்படுத்த திட்டமிட்ட வருகிறது. மின்சார அதிக வாரிய அதிகாரிகள் மீது புகார்கள் தொடர்ந்து வரும் நிலையில் அதிகாரிகள் தவறு செய்தால் கண்காணிக்க மின்வாரியத்தில் உள்ள 12 மண்டலங்களிலும் சுமார் தலா மூன்று பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட உள்ளது. மின்சார வாரியத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு விரைவில் தொழிற்சங்க தேர்தல் நடத்தப்பட உள்ளது.


இந்த தேர்தலில் 15 சதவீத தொழிலாளர்களின் வாக்குகள் பெரும் சங்கத்திற்கு மட்டும் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஒரு லட்சத்து 45 ஆயிரம் மின்கம்பங்கள் தயாராக உள்ளன. தாழ்வான பகுதிகளுக்கு செல்லும் மின்வட கம்பங்கள் கம்பிகள் மாற்றப்பட்டு வருகின்றன. வலுவற்ற மின்கம்பங்கள் மாற்றப்படும் உள்ளன 80 சதவீத பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், பருவமழை தொடங்குவதற்கு முன்பே மழையை எதிர்கொள்ள அவை தயார் படுத்தப்பட்டு உள்ளது.

Input & Image courtesy: Polimer News

Tags:    

Similar News