சென்னை டிராபிக்கை கட்டுப்படுத்த தயாராகும் புதிய விரைவு சாலை.!

சென்னை டிராபிக்கை கட்டுப்படுத்த தயாராகும் புதிய விரைவு சாலை.!

Update: 2020-12-02 11:57 GMT

தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் வருவது வழக்கம். அப்படி வரும்போது நகரில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் சென்னை வாசிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாவார்கள். இதனை கட்டுப்படுத்த பல்வேறு சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் திறக்கப்பட்டாலும் போக்குவரத்து நெரிசல் என்பது குறையவே இல்லை.

இந்நிலையில், சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசல் என்பது சென்னை மக்களுக்கு பழக்கப்பட்ட ஒன்றுதான். புதிதாக சென்னை நகருக்குள் காலடி வைக்கும் நபர்கள் இந்த போக்குவரத்து நெரிசலை கண்டு விழி பிதுங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். சில நேரங்களில் அவர்கள் மிரண்டு போயும் உள்ளனர். குறிப்பாக சரக்கு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்டவை அண்டை மாநிலங்களுக்கு செல்லும் போது, சென்னை நகரை சுற்றிதான் செல்ல வேண்டும். ஏனென்றால் இந்த வாகனங்கள் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலை வழியாக செல்லும்போது போக்குவரத்து நெரிசல் கூடுதலாகவே ஏற்படும்.

இதனை கட்டுப்படுத்துவதற்காக அண்டை மாநிலங்களுக்கு செல்லும் சரக்கு வாகனங்கள் எளிதாக பயணிக்க நகர எல்லைகளில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் முக்கியமானது சென்னை- பெங்களூரு, சென்னை, கொல்கத்தா சாலை தான். இதற்கான 2ம் கட்ட நிறைவு பணி தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த சாலை பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


வண்டலூர், மீஞ்சூர் இடையே 64 கிலோ மீட்டர் நீளத்திற்கு வெளிவட்ட சாலை அமைக்க 2,160 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் 2011ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் சென்னை, திருப்பதி சென்னை, பெங்களூரு, சென்னை, கொல்கத்தா போன்ற தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.


இந்த சாலைகள் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலை வண்டலூரில் தொடங்கும் வழியாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் வண்டலூர், நெமிலிச்சேரி வரையிலான பணிகள் கடந்த 2013ம் ஆண்டு அப்போதையை முதலமைச்சர் ஜெயலலிதா மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தார்.

ஆனால் வண்டலூர், மீஞ்சூர் இடையேயான சாலையில் பணிகள் கடந்த 7 வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் இதற்கான பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என தெரிகிறது. இதன் பின்னர் சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசல் மிகவும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 

Similar News