புதிய ரேஷன் கடை கட்டி 2 ஆண்டுகள் ஆகிவிட்டன... இன்னும் திறக்காத நிலைமை... புலம்பும் பொதுமக்கள்!

புதிய ரேஷன் கடை கட்டி இரண்டு ஆண்டுகள் ஆகியும் திறக்கப் படாததால் பொதுமக்கள் புலம்பல்.

Update: 2023-05-02 01:54 GMT

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ளது தான் ஆண்டிபட்டி என்ற ஒரு சிறிய கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களுக்குறிய ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பக்கத்தில் இருக்கும் சாலிசந்தை கிராமத்திற்கு சென்று தான் ரேஷன் கடை பொருட்களை வாங்க வேண்டிய ஒரு நிலைமை இருந்து வந்து இருக்கிறது.


குறிப்பாக இரண்டரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வாங்க வேண்டும் என்பதால் ஆண்டிபட்டியிலேயே புதிதாக ரேஷன் கடை கட்ட 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் கடந்த 2020 ஆம் ஆண்டு 14 லட்சம் செலவில் டீ கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் கட்டிடம் கட்டப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த ஒரு புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இரண்டு ஆண்டுகள் மேலாகியும் தற்போது வரை இந்த ரேசன் கடை திறக்கப்படாமலே உள்ளது. இதனால் இந்த கிராமத்தில் இருக்கின்ற மக்கள் இரண்டரை கிலோ மீட்டர் தூரம் நடந்த சென்று தான் பொருட்களை வாங்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.


எனவே ரேஷன் கடை பொருட்கள் ஆண்டிப்பட்டியில் உள்ள ஒரு இடத்தில் வைத்து பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட தற்காலிகமாக நடைபெற்று வருகிறது. இருந்த பொழுதும் புதிதாக கட்டப்பட்ட இந்த ரேஷன் கடைகளை திறக்க வேண்டும் என்று கிராம மக்கள் நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் எத்தனை முறை மனு கொடுத்தும் இன்று வரை திறக்கப்படாமல் இருக்கிறது. எனவே பொதுமக்களின் நலனுக்காக உடனடியாக ரேஷன் கடையை திறக்க வேண்டும் என்று மக்கள் புலம்பி இருக்கிறார்கள்.

Input & Image courtesy: Thanthi News

Tags:    

Similar News