கொரோனா தொற்று தீவிரம். கோவையில் புதிய கட்டுப்பாடுகள்?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் இன்று முதல் வருகின்ற ஆகஸ்ட் 9ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Update: 2021-08-01 05:14 GMT

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் இன்று முதல் வருகின்ற ஆகஸ்ட் 9ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் தமிழக அரசால் ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் கோவை மாவட்டத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் அமலுக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி, கடைகள் தவிர மற்ற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்கும். 


மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட கிராஸ்கட் ரோடு, 100 அடி சாலை, காந்திபுரம் 5, 6 ஏழாவது தெருக்கள், ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, ரைஸ்மில் சாலை, என்பி இட்டேரி சாலை, எல்லை தோட்ட சந்திப்பு, துடியலூர் சந்திப்பு ஆகிய தெருக்களில் இயங்கும் அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை இயங்குவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

மேலும், உணவகங்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அமர்ந்து 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது. கேரளா மாநில எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Source:  Top News

ImageCourtesy:Toptamilnews


Tags:    

Similar News