பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு புதிய வகை கொரோனா வைரஸ்.. சுகாதாரத்துறை செயலாளர்.!

பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு புதிய வகை கொரோனா வைரஸ்.. சுகாதாரத்துறை செயலாளர்.!

Update: 2020-12-29 11:01 GMT

பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு உருவாறிய கொரோனா வைரஸ் இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் முதன் முறையாக உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த நாட்டுடன் விமான சேவையை மற்ற உலக நாடுகள் நிறுத்தியது.

இதனால் இங்கிலாந்தில் இருந்து பரவும் வைரஸ் பெருமளவு தடுக்கப்பட்டது. இருந்த போதிலும் கடந்த மாதம் முதல் தற்போது வரை இந்தியா வந்தவர்களை சுகாதாரத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. அவர்களுக்கு ஏதேனும் உடலில் பாதிப்பு உள்ளதா என்பன பற்றி ஆய்வுகளும் நடத்தப்பட்டு வந்தது. சில வாரங்கள் அனைவரையும் தனிமைப்படுத்தியும் மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட நபர் தனி அறையில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் கூறினார். அவரது ரத்த மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பிய பின்னர் அங்கிருந்து உறுதி செய்யப்பட்ட தகவல் எனவும் கூறினார்.

இந்த புதிய வைரஸ் தொற்றை கண்டு மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும், அனைவரும் முககவசம் அணிந்து கொண்டு, சமூக இடைவெளியை கடைப்பிடித்து வந்தால் தொற்றில் இருந்து விடுபட முடியும் எனவும் கூறினார்.
 

Similar News