சனாதனம் குறித்து பேசிய சபாநாயகர்.. போலீசில் புகார் கொடுத்த இந்து அமைப்பு..
தமிழகத்தின் சனாதனம் குறித்து விவகாரம் பெரும் சற்று ஏற்படுத்தியிருக்கிறது. பல்வேறு நபர்களும் இந்து மதத்தை காயப்படுத்தும் விதமாக சனாதனத்தை குறித்து தங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களை பொது கருத்துக்களாக தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ்நாடு அரசின் சபாநாயகர் இது குறித்து கருத்து தெரிவித்து இருந்தார். சனாதானம் விவகாரத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு மூல காரணமாக நிகழ்ந்த நிகழ்வு என்னவென்றால், நெல்லை பாளையங்கோட்டை மாவட்ட பொன்விழா நிறைவு கொண்டாட்ட நிகழ்வில் பாளையங்கோட்டை தூய சவேரியார் பள்ளி மைதானத்தில் 2 நாட்களுக்கு முன் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது தான் இவர் இவர் சனாதரத்தை பற்றி கருத்து தெரிவித்து இருக்கிறார். இதன் காரணமாக இவற்றை ஏற்றுக்கொள்ளாது என்று அமைப்புகள் இவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்து இருக்கிறார்கள்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் பேசும் போது, ”சனாதனம் என்பது இந்துக்களுக்கு எதிரானதாகும். 4 சதவீதம் பேர் மட்டுமே இதன் மூலம் பயன்பெற்று வருகின்றனர். மீதமுள்ள 96 சதவீம் பேர் அடிமை வாழ்க்கைதான் வாழ்கின்றனர். 1935- ம் ஆண்டுக்குப்பின் லாடு மெக்காலே பிரபுதான் அனைவருக்கும் சமமான கல்வியை கொண்டு வந்தார். இந்த நாட்டில் சமூக நீதிக்கு முதலில் வித்திட்டவர்கள் அருட்தந்தையர்கள் தான். ஏசு சபைகள் முடக்கம், மணிப்பூரில் 300 தேவாலயங்கள் இடிப்பு, இதற்கு காரணம் ஏசு சபையினர் அனைவருக்கும் கல்வி கொடுப்பதுதான் இதனை தடுப்பதுதான் சனாதனம். இதனால்தான் தமிழகத்தில் முதல்வர் உள்பட அனைவரும் எதிர்க்கின்றனர் இன்று கருத்து தெரிவித்து இருந்தார். இதன் காரணமாக இவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
Input & Image courtesy: News