தமிழக அரசிற்கு அதிகாரம் இல்லை - ஆளுநர் ஆர். என். ரவி!

Update: 2023-09-27 01:06 GMT

தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, துணைவேந்தரை தேர்ந்தெடுக்க ஆளுநரின் ஒப்புதல் இன்றி தேடுதல் குழுவை அமைப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை எனக் கூறியுள்ளார். 

சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கு தமிழக ஆளுநர் ஆர் என் ரவி யு ஜி சி யின் பிரதிநிதியை நியமித்திருந்தார் ஆனால் தமிழக அரசு ஆளுநர் அமைத்த தேடுதல் குழுவை நிராகரித்ததோடு ஆறு தினங்களுக்கு முன்பு புதிய குழு ஒன்றையும் அமைத்து தமிழக அரசிதழில் வெளியிட்டது.

அந்த குழுவில் கர்நாடக மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பட்டு சத்திய நாராயணா ஒருங்கிணைப்பாளராகவும், முன்னாள் துணைவேந்தர் ஜெகதீசன் மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தீனபந்து ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.

தமிழக கவர்னர் ஏற்கனவே அமைத்த தேடுதல் குழுவை நிராகரித்து இந்த புதிய குழுவை தமிழக அரசு அமைத்துள்ளதற்கு கவர்னர் ஆர் என் ரவி ஆட்சேபம் தெரிவித்ததோடு, தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேடுதல் குழு குறித்த தகவல் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதை திரும்ப பெற வேண்டும் என்றும் துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் குழுவை ஆளுநரின் ஒப்புதல் இன்றி அமைக்க உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளருக்கு அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். 

Source - Dinamalar

Similar News