சனாதனத்திற்கு எதிராக அமைச்சர்கள் பேசிய ஆதாரங்கள் வேண்டும்.. நீதிமன்றம் உத்தரவு..
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு கடந்த மாதம் நடத்தப்பட்டது. இந்த ஒரு நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் எம்.பி ஆ ராசா உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு சனாதனத் தருமத்திற்கு எதிராக பேசினார்கள். இதன் நிலையில் அமைச்சர் மற்றும் எம்பி ஆகியுரை பதவி நீக்கம் செய்ய கோரி வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கை சென்னை சேர்ந்த ஒருவர் இந்த வழக்கை தாக்கல் செய்து இருக்கிறார்.
இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகளாக இருக்கும் பலரும் இந்த இந்த நிகழ்ச்சிக்கு எதிராக தனிப்பட்ட முறையில் வழக்குகளை தொடர்ந்து இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. இந்த வழக்குகள் எல்லாம் நீதிபதி அனிதா அவர்கள் முன்பு விசாரணைக்கு வந்தது அப்பொழுது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வக்கீல் இது பற்றி கூறும் பொழுது, இந்த வழக்கு தவறாக தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. விசாரணைக்கு உகந்தது அல்ல, பதவி வகிப்பதில் விதிமீறல் இருந்தாலோ, ஏதாவது தகுதி இல்லாமல் இருந்தாலோ, கோவா ராண்டோ வழக்கு தொடர முடியும்.
எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதாடினார். பிறகு இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அமைச்சர்கள் மற்றும் எம்.பி ஆகியோர் பேசிய உரிய ஆதாரங்கள் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை வருகின்ற 11ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. உரிய ஆதாரங்களுக்கு உடன் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: News