சென்னி மலையை கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம் என்ற சர்ச்சை.. அதிர்ச்சியில் இந்துக்கள்..
சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலை, கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம் என்று கூறிய கிறிஸ்தவ முன்னணி அமைப்பினரை கைது செய்யக்கோரி, சென்னிமலையில் 13ல் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் அமைந்துள்ள கத்தக் கொடிக்காடு என்னும் இடத்தில் தான் இந்துக்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள். ஹிந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அர்ஜூனன் என்பவர் ஜான் பீட்டர் வீட்டில், மதமாற்றம் செய்யும் நோக்கில், அனுமதியின்றி கிறிஸ்தவ அமைப்பு சார்பில், தொடர்ந்து ஞாயிறு தோறும் ஜெபக்கூட்டம் நடத்தியது.
வெளியூர்களில் இருந்தும் பலர் வந்தனர். ஒலிப்பெருகி மூலம் கூட்டம் நடத்துவதுடன், ஹிந்து தெய்வங்களை சாத்தான் எனக்கூறி இழிவுபடுத்தி பேசினர். இதனால் அப்பகுதி ஹிந்துக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கூட்டம் நடத்துவதால் பல்வேறு தொந்தரவுகளையும் சந்தித்து வந்தனர். கடந்த மாதம் செப்டம்பர் 17ம் தேதி வழக்கம்போல் ஜெபக்கூட்டம் நடந்தது. அங்கு சென்ற பாரதிய ஜனதா கட்சியினர், ஹிந்து முன்னணி அமைப்பினர், அனுமதி இன்றி ஜெப கூடங்கள் நடத்தக்கூடாது என்று கூறுகிறார்கள். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இந்நிலையில் பல்வேறு பல்வேறு அமைப்பினர் குறிப்பாக கிறிஸ்துவ அமைப்பினர் வலியுறுத்தலின் பெயரில் கொடுத்த புகாரின் அடிப்படையில நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக கோபம் அடைந்த இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும் முயற்சி செய்து இருக்கிறார்கள். இதில் ஒரு தரப்பினரை மட்டும் போலீசார் கைது செய்ததன் காரணமாக பரபரப்பில் ஏற்பட்டு இருக்கிறது இந்துக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள்.
Input & Image courtesy: News