சிலைகள் திருட்டை திமுக வேடிக்கை பார்க்கிறதா.. தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேள்வி?

Update: 2023-10-17 03:31 GMT

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தற்பொழுது மூன்றாம் கட்ட நடை பயண பாதயாத்திரையை அவிநாசியில் நேற்று துவங்கி இருக்கிறார். குறிப்பாக கொட்டும் மழையிலம் தன்னுடைய இலக்கையும் கட்சிப் பணிக்காக எதையும் பொருட் படுத்தாமல் தன் கொண்ட இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார். குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பார்க்க வேண்டும் என்ற காரணத்திற்காக மக்கள் அனைவரும் மழை என்றும் பாராமல் தன்னுடைய குறைகளை கூறுவதற்கு முன்வந்தார்கள்.


அப்போது, 'கோவில் சிலைகள் திருடப்படுவதை திமுக அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. கோவிலுக்கும், இந்துக்களுக்கும் எதிரான ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது என்று அண்ணாமலை விமர்சித்தார். பாஜக மாநில தலைவர் தமிழகம் முழுவதும் என்மன் என் மக்கள் யார் தெரியும் சிறப்பாக நடத்தி வருகிறார். அவரை மூன்றாம் கட்ட நடை பயண யாத்திரை தற்பொழுது தொடங்கி இருக்கிறது. குறிப்பாக பாஜகவிற்கு நல்ல ஆதரவு தரும் அவிநாசியில் இந்த ஒரு யாத்திரை தற்பொழுது தொடங்கப்பட்டிருக்கிறது. மக்கள் மத்தியில் பாஜகவிற்கு மேலும் ஆதரவு பெருகி கொண்டு தான் வருகிறது.


இந்த பாதயாத்திரையில், மத்திய அமைச்சர்கள் பியுஷ்கோயல், எல்.முருகன், பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாத யாத்திரை துவங்கியதும், அப்பகுதிகளில் கனமழை கொட்டியது. மழையை பொருட்படுத்தாமல் அண்ணாமலை, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் மழையில் நனைந்தபடி பாத யாத்திரை மேற்கொண்டனர்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News