தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது.. மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு..

Update: 2023-10-18 05:14 GMT

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் என் மண் என் மக்கள் என்று பாத யாத்திரையை தமிழகத்தில் தொடங்கியிருக்கிறார். குறிப்பாக இந்த பாதை யாத்திரை தற்பொழுது மூன்றாம் கட்டத்தை அடைந்து இருக்கிறது. இந்த பாதை யாத்திரை பயணத்தில் தற்பொழுது மத்திய அமைச்சர் பங்கேற்று தன்னுடைய கருத்தை பதிவு செய்து இருக்கிறார். இது பற்றி அவர் கூறும் பொழுது, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது என்று மத்திய ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ் கோயல் குற்றஞ்சாட்டினாா்.


பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை அவர்கள் திருப்பூா் மாவட்டம், அவிநாசி சிந்தாமணி பேருந்து நிறுத்தத்தில் மத்திய ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ் கோயல் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். இந்த நடைப்பயணம் அவிநாசி சேவூா் சாலை, கச்சேரி வீதி, வடக்கு, கிழக்கு ரத வீதி, கோவை பிரதான சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. பிறகு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசி இருக்கிறார்.


அங்கு மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் பேசும் போது, ஊழல் இல்லாத தமிழகத்தை பிரதமா் மோடி உருவாக்க நினைக்கிறாா். இந்தியாவில் அதிக ஊழல் நிறைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் தமிழக மக்கள் மிகுந்த பயனை அடைந்து வருகிறார்கள் என்பதையும் அவர் குறிப்பிட்டு இருந்தார். ஊழலும், ஏழ்மையும் ஒழிய பாஜகவுக்கு ஆதரவு தாருங்கள் என்றாா்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News