மூவர்ண கொடியின் புனிதத்தை தி.மு.க அரசு இழிவுபடுத்தியதா? அண்ணாமலை கண்டனம்..

Update: 2023-10-24 04:26 GMT

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் இந்திய தேசியக்கொடியுடன் பார்க்க வந்த ரசிகர்களிடமிருந்து போலீசார் மூவர்ணக் கொடியை பறிமுதல் செய்து இருக்கிறார்கள் இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டி நடக்கிறது. 11 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் அணி சென்னையில் விளையாடுவதால் போட்டியை பார்க்க வந்த ரசிகர்கள் கடும் சோதனைகளுக்கு பிறகு மைதானத்தில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள்.


கருப்பு உடை இந்திய தேசிய கொடியை எடுத்து வர சில தடைகள் கடைபிடிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய தேசிய கொடியுடன் வந்து சில ரசிகர்களிடம் போலீஸ்காரர்கள் தேசியக்கொடியும் பறிமுதல் செய்தார்கள். அங்கு பறிமுதல் செய்து போலீசார் குப்பை தொட்டியில் போட முயற்சிக்கிறார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிகழ்வுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் உதயநிதி இந்திய பாகிஸ்தான் விளையாட்டு போட்டியின் போது ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் எழுந்தது அதை குறிப்பிட்டார்.


சேப்பாக்கத்தில் இன்றைய போட்டிக்கு இந்திய தேசிய கொடியுடன்  சென்ற ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே போலீசாரல் அனுமதிக்கப்பட வில்லை. இது உரிமையை யார் கொடுத்தது? நமது தேசிய கொடிய அவமதித்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மூவர்ணக் கொடியின் புனிதத்தை இழிவுபடுத்தும் இந்த ஊழல் திமுக அரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News