புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளில் ஆணி அடித்து மின் அலங்காரம்.. பக்தர்கள் வேதனை..
தஞ்சாவூர் பெரிய கோவிலில் நேற்று ராஜராஜ சோழன் சதய விழாவுக்காக மின் அலங்காரம் செய்யப்பட்டது. .குறிப்பாக இந்த மின் அலங்காரம் செய்ய சுதை, கல்வெட்டு என பார்க்காமல் ஊழியர்கள் ஆங்காங்கே ஆணி அடித்து மின் விளக்கு அலங்காரங்கள் செய்தார்கள். இதுபோல விநாயகர் சன்னதியை மறைத்து மேடை அமைக்கப் பட்டதாகவும் பக்தர்கள் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் முடிசூடிய நாளை அவர் பிறந்த ஐப்பசி மாதம் சதய நட்சத்திர நாள் என்று ஒவ்வொரு ஆண்டும் சதய விழாவாக கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ராஜராஜ சோழனின் 1038 இன்றும், நேற்றும் கொண்டாடப்பட்டது. இதை தமிழக அரசு விழாவாக அறிவித்தது. சதய விழாவை முன்னிட்டு கோவிலில் உள்ள பிரகாரம் வெளிப்புறம் கோபுரம் வெளியுள்ள சோழன் சிலை என அனைத்திடங்களும் சீரியல் மின்புலப்புகளால் அலங்கரிக்கப்பட்டது.
இதற்காக கசட்டு மேனிக்கு ஆங்காங்கே கோபுரங்கள் கோவில் சுவர்களை ஆணி அடித்து மின்விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டது. இதனால் சில இடங்களில் சுவைகளும் கல்வெட்டுகள் மீது ஆணி அடிக்கப்பட்டதால் அபாயம் இருப்பதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் பக்தர்கள் கவலையை தெரிவித்து இருக்கிறார்கள். அதில் ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் விநாயகர் சன்னதி முன்பு விநாயகர் சன்னதியை மறைத்தபடி மேடை அமைக்கப்பட்ட இருப்பதற்கும் பக்தர்கள் வேதனையை தெரிவித்தார்கள்.
Input & Image courtesy: News