திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் போதை கும்பலா.. இந்து சமய அறநிலையத்துறை எங்கே?

Update: 2023-10-30 03:26 GMT

திருவண்ணாமலை கோவிலில் பௌர்ணமி தினங்களில் கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துதான் வருகிறது. குறிப்பாக திருவண்ணாமலை பௌர்ணமி தினங்களின் போது கிரி வலம் வரும் பக்தர்களை குறி வைத்து அவர்களிடம் போதை கும்பல் பணப் பறிக்கும் செல்களில் தொடர்ச்சியான வண்ணம் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக காவி உடை, கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து கொண்டு அவர்கள் சுண்ணாம்பு கட்டிகளை தூளாக்கி தட்டில் வைத்து கிரிவலத்திற்கு வருகை தரும் பக்தர்களின் நெற்றியில் பூசி தட்டில் பணம் போடும்படி வற்புறுத்துகிறார்கள்.


இதில் பெண் பக்தர்களின் நெற்றி மற்றும் கழுத்து பகுதிகளில் இவர்கள் விபூதி போன்று பொருட்களை திடீரென வழி மறித்து பூசுவதால் பெண்கள் சற்று பயப்படுவதாக தெரியப்படுகிறது. இந்த போதை கும்பல் பல லட்ச பக்தர்களை பற்றி பரவசத்துடன் நடந்து செல்லும் பாதையில் அமர்ந்து கொண்டு மது அருந்துவது, அந்த வழியாக செல்லும் பக்தர்களை முகம் சுளிக்க வைக்கும் செயல்களில் ஈடுபடுவது போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபடுகிறார்கள்.


இது போன்ற நிகழ்வுகள் அத்துமீறலில உச்சமாக இருக்கிறது. குறிப்பாக கோவில்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. சுமார் 50க்கும் மேற்பட்ட நபர்கள் சாமியார்கள் என்ற போர்வையில் கிரிவலம் வரும் பக்தர்களிடம் அத்துமீறி பணம் பறிக்கும் செல்களில் தொடர்ச்சியான வண்ணம் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களை உரிய நடவடிக்கையில் தடுத்து நிறுத்த காவல்துறை மற்றும் இந்து சமய அறநிலைத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் தரப்பில் கூறப் பட்டிருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News