சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வகையில் மத்திய அரசு சார்பில் பல்வேறு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. அந்த வகையில் சர்தார் வல்லபாய் படேலின் 148-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில், சென்னை ஆவடியில் உள்ள போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (சி.வி.ஆர்.டி.இ) சார்பில் ஒற்றுமைக்கான ஓட்டம் நேற்று நடைபெற்றது. இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. சி.வி.ஆர்.டி.இ-யின் இயக்குநர் ராஜேஷ்குமார் காலை 9.30 மணிக்கு "ஒற்றுமைக்கான ஓட்டத்தை" கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக பேசிய அவர், தேச ஒற்றுமையில் சர்தார் வல்லபாய் படேலின் பங்களிப்புகளை நினைவு கூர்ந்தார். இந்தியா பல்வேறு இன மற்றும் மொழிக் குழுக்களைக் கொண்ட பன்முகத்தன்மையுடன் கூடிய நாடு என்றும், "ஒற்றுமைக்கான ஓட்டம்" போன்ற சந்தர்ப்பங்கள் வேற்றுமையில் ஒற்றுமையை நினைவுகூர்வதற்கான வாய்ப்பை வழங்குகின்றன என்றும் அவர் கூறினார்.
சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற இந்த ஓட்டத்தில் சிவிஆர்டிஇ-யை சேர்ந்த சுமார் 150 ஊழியர்கள் பங்கேற்றனர். இந்தியாவில் உள்ள அனைவரும் வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும் என்று அடிப்படையை நோக்கமாகக் கொண்டு இந்த ஓட்டம் நடைபெற்று இருப்பதாகவும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய அரசின் பல்வேறு ஊழியர்கள் சுமார் நூற்றி ஐம்பதற்கும் மேற்பட்டோர் இந்த ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: News