காவல் துறைக்கு எச்சரிக்கை விடுத்த அண்ணாமலை! நாங்கள் தயார்!

Update: 2023-11-02 06:58 GMT

கடந்த மாதம் 20ஆம் தேதி அன்று சென்னை பனையூரில் அமைந்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீடு முன்பு ஏற்றப்பட்டிருந்த பாஜகவின் கொடி கம்பம் அகற்றப்பட்டதை அடுத்து நவம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து தமிழக முழுவதும் பத்தாயிரம் கோடி கம்பங்கள் நடப்படும் என்று அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.

அதன்படி நேற்றைய தினம் திண்டுக்கல் மற்றும் கோவை என சில பகுதிகளில் பாஜகவினர் கட்சி கொடியை ஏற்ற முற்பட்ட பொழுது கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, பட்டுக்கோட்டையிலும் கட்சியின் கொடியை ஏற்ற விடாமல் தடுத்த போலீசார் எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட அஸ்வத்தாமன் மற்றும் பத்து பெண்கள் உள்ளிட்ட 57 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பட்டா நிலமான ஒருவருடைய சொந்த நிலத்தில் கொடிக்கம்பம் போட்டு கொடியை ஏற்றுகிறார்கள் அதை தடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை முதலமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும் அவரைவிட அதிகம் படித்து விட்டுதான் இங்கே இருக்கிறேன்! அதனால் காவல் துறையை ஏவல் துறையாக வைத்து கொடி கம்பத்தை புடுங்கி விடலாம் என்று நினைத்தால் ஒரு மாதம் 24 மணி நேரமும் தமிழக காவல்துறையை ரோட்டில் வைப்பதற்கு நாங்கள் தயார்!

காவல்துறை கொஞ்சமாவது தங்களது அறிவை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் நானும் இரண்டு நாட்கள் பொறுமையாக இருந்து பார்கிறேன் இதே நிலை நீடித்தால் காவல்துறை ரோட்டில் தான் இருப்பார்கள் என தனது கண்டனத்தை தெரிவித்தார். 

Source : Asianetnews Tamil

Similar News