தி.மு.க., அ.தி.மு.க., கவுன்சிலர்கள் இடையே கைகலப்பு.. நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு..

Update: 2023-11-03 03:08 GMT

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி அவசர கூட்டம் நேற்று முன்தினம் 10 மணிக்கு தலைவர் பர்வீன் தலைமையில் தொடங்கியது. கூட்டத்தில் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். ஆனால் நகராட்சி ஆணையர், நகராட்சி பொறியாளர் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இந்த கூட்டம் தொடங்கியதும் அதிமுக கவுன்சிலர் தனசேகரன் என்பவர் எழுந்து இந்த கூட்டத்தை யார் நடத்துவது? மாத கடைசியில் கூட்டம் நடத்துகிறீர்கள்? ஆனால் நகராட்சி ஆணையர், நகராட்சி பொறியாளர்கள் கலந்து கொள்ளவில்லை. நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு யார் பதில் சொல்வது? எனவே இந்த கூட்டத்தை நடத்தக் கூடாது என்றார். உடனே திமுக கவுன்சிலர் தலைவர் தொடர்ந்து கூட்டத்தை நடத்தலாம் என்று கூறினார்.


உடனே அதிமுக கவுன்சிலர் கூட்டத்தை நடத்தக்கூடாது என்றார். இதனால் திமுக அதிமுக கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் கூட்ட உறுப்பினர்கள் அனைவரும் கூச்சலில் ஈடுபட்டார்கள். மேலும் கூச்சல் குழப்பமாக காணப்பட்டது. இதனால் ஆவேசம் அடைந்த 17 வது வார்டு திமுக கவுன்சிலர் அங்கிருந்த நாற்காலிகையை தூக்கி அதிமுக கவுன்சிலர் மீது தூக்கி வீசினார். மைக்கை எடுத்து அதிமுக கவுன்சிலர்களை தாக்கம் முயற்சி செய்தார். அப்பொழுது அவர்களுக்கிடையே கைகலப்பு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


இதனால் நகராட்சி அரங்கமே பரபரப்பாக காணப்பட்டது. கூச்சல் குழப்பங்களுக்கிடையே தலைவர் மற்றும் மற்றவர்கள் கூட்டத்தை விட்டு வெளியேறி விட்டார். அதனை தொடர்ந்து திமுக கவுன்சிலர்களும் வெளியேறினார்கள். இந்த நிலையில் அதிமுக கவுன்சிலர்கள் நாற்காலி தூக்கி வீசி கொலை முயற்சியில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி நகர்மன்ற கூட்டத்தின் மைய அரங்கில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News