எக்கச்சக்கமான புகார் மனுக்கள்.. மாற்றத்தை நோக்கிய தமிழக மக்களுக்கு ஒளியாய் வந்த அண்ணாமலை..

Update: 2023-11-05 02:38 GMT

தமிழகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் என் மண் என் மக்கள் என்ற பாத யாத்திரையை நடத்தி வருகிறார். குறிப்பாக இந்த ஒரு பாத யாத்திரையானது கடந்த 52 நாட்களாக சிறப்பாக நடைபெற்று இருக்கிறது. இந்த 52 நாட்களில் தமிழக அரசுக்கு மற்றும் மக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் புகார் மனுக்களை பெற புகார் பெட்டி என்ற ஒன்றையும் தமிழக பாஜக சார்பில் என் மண் என் மக்கள் என்று யாத்திரையில் சேர்க்கப்பட்டது. இந்த யாத்திரை பயணத்தின் போது என் மண் என் மக்கள் புகார் பெட்டியில் மக்கள் தற்போது வரை 20,000 புகார் மனுக்களை கொடுத்து இருக்கிறார்கள்.


யாத்திரை தொடங்கி 52 நாட்களில் சுமார் 20,000 பேரிடம் புகார் மனுக்கள் பெற்று இருப்பதாக அதிகாரப் பூர்வமாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஜூலை மாதம் 12ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இந்த யாத்திரி ஆனது தொடங்கப்பட்டது. குறிப்பாக பரமக்குடி, சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி, அறந்தாங்கி, மேலூர், மதுரை, திருமங்கலம், திருப்பரங் குன்றம், விருதுநகர், சிவகாசி, திருச்செந்தூர், தூத்துக்குடி, நெல்லை, ஆலங்குளம், தென்காசி, நாகர்கோயில் என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதுகாத்தல் அண்ணாமலை அவர்கள் நிறைவு செய்து இருக்கிறார். தற்போது மூன்றாம் கட்ட பாதுகாத்திரியை தொடங்கியிருக்கிறார்.


நேற்று கரூரில் நடைபெற்ற பாதயாத்திரியில் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது இது பற்றி கூறியிருக்கிறார். அண்ணாமலை அவர்கள் அதைப்போல் அண்ணாமலையின் பாத யாத்திரையின் போது பா.ஜ.க தொண்டர்களும் பொதுமக்களும் புகார் மனுக்களை அவரிடம் நேரடியாக வழங்குகின்றனர். இதுவரை 52 நாட்களில் மட்டும் 20,000 மேற்பட்ட புகார் மனுக்கள் பெறப்பட்டதாக பாஜக வட்டார தரப்பில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த புகார்களை கணினிகளில் சேமித்து அதன் மூலம் நடவடிக்கை எடுக்க பாஜக தற்போது தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News