திருவண்ணாமலை கோவில் கோபுரத்தை மறைத்து வணிக வளாக கட்டிடமா.. என்ன நடக்கிறது?

Update: 2023-11-11 03:27 GMT

தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் வந்து வழிபடும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தை வழிபட முடியாத அளவிற்கு அதை மறைத்து வணிகவளாக கட்டிடம் கட்டுவதற்கு இந்து சமய அறநிலைத்துறை அனுமதி அளித்ததாக தற்பொழுது சர்ச்சை எழுந்து இருக்கிறது. இந்த சர்ச்சை தான் கடந்த ஒரு வாரங்களாக பேச்சுப் பொருளாக மாறி இருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்த பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக இந்து அமைப்புகள் போராட தயாராகி வருகின்றன.


அனைத்து திறப்பு மக்களுக்கும் முக்தி தரும் சிறந்த திடமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் இருந்து வருகிறது. தமிழகத்தில் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இந்து கோவிலுக்கு வருகை தருவது வழக்கம். பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகின்றனர். கோயிலில் நுழைவு வாயிலாக அமைந்துள்ள கோபுரம், 11 நிலைகளுடன், 217 அடி உயரம் கொண்டது.


கோபுர தரிசனம் என்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்க படுகிறது ஏனெனில் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து கோவிலின் கோபுரத்தை அடைந்து விட்டோம் என்ற மகிழ்ச்சியில் கோவிலை அடைந்து விடுவார்கள். கோவிலுக்கு வருகை தர முடியாத சில பக்தர்கள் கூட கோவில் கோபுரத்தை வணங்கி விட்டு செல்வது வழக்கம். ஏற்கனவே கடைகள் அதிகமாகிவிட்ட நிலையில் தற்போது அங்கு இருக்கும் சிறுகடைகளை அகற்றிவிட்டு பெரிய வணிகவளாகம் கட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. அப்படி ஒருவேளை வணிக வளாகம் கட்டப்பட்டால் கோவில் கோபுர தரிசனம் என்பது நடக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News