இந்த காலத்திலும் மின்சாரம் இல்லாத ஊர்!! அடிப்படை வசதிகளுக்காக அவதிப்படும் மக்கள்!!
இன்றைய காலகட்டத்தில் மின்சாரம் என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த நிலையில் குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் ஊர்களுக்கு இன்று வரையிலும் கூட மின்சாரம் கிடைப்பதில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்ட ஆனை மலையை சுற்றியுள்ள 38 கிராமங்களில் நெடுங்குன்றம் என்ற கிராமத்தை தவிர்த்து மற்ற எந்த ஒரு கிராமத்திலும் மின்சார வசதி கிடையாது. இங்கு வாழும் மக்கள் அணை கட்டுமானத்திற்காக தங்களுடைய இருப்பிடங்களை இழந்து வாழ்பவர்களாக உள்ளனர்.
இவர்கள் வாழும் இடங்களில் மின்சார வசதி இல்லை. ஆனால் அவர்களுக்கு அருகில் இருக்கும் வனத்துறை அலுவலகங்கள், நீர்மின் நிலையங்கள் மற்றும் சுற்றுலா பகுதிகள் போன்ற இடங்களில் மின் வசதி வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட ஊரில் அமைந்திருக்கும் கெஸ்ட் ஹவுஸ்களில் மின் வசதி அளிக்கப்படும் அந்த ஊரில் மற்ற பகுதிகளுக்கு மின் வசதி அளிக்கப்படாமல் இருப்பது அங்கு இருக்கும் பழங்குடியினருக்கு மிகவும் வேதனை அளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது.
கீழ்பூனாட்சி என்ற கிராமம் புலி சரணாலயம் இருக்கும் இடம் என்பதால் வசதி அளிக்க முடியாது என்று கூறியதாகவும், அதனைத் தொடர்ந்து சமீபத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் மின்சாரம், குடிநீர், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கோரிக்கைகளை கேட்டு விரைவில் நிறைவேற்றுவதாகவும் கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசு விரைவில் இவர்களுடைய தேவையை அறிந்து பழங்குடியின மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.