மேக் இன் இந்தியா திட்டத்தில் அடுத்த பாய்ச்சல், சென்னையில் தயாராகும் ஹைட்ரஜன் எரிவாயு ரயில் - எப்போது தெரியுமா?

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் எப்போது வரும் என மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2022-09-17 11:31 GMT

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் எப்போது வரும் என மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.


உலகில் முதன்முறையாக ஹைட்ரஜன் வாயுவால் இயங்கும் பயணிகள் ரயில் ஜெர்மனியில் கடந்த மாதம் செயல்பாட்டுக்கு வந்தது இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத மாற்று எரிபொருளாக உள்ளது அதே சமயம் வேகம், நிலைத்தன்மை ஆகியவற்றின் பல்வேறு அம்சங்கள் மற்ற ரயில்களை விட ஹைட்ரஜன் வாயுவால் இயங்கும் ரயில்களில் சிறந்து விளங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இந்தியாவில் முற்றிலும் ஹைட்ரஜன் ரயிலை உள்நாட்டில் தயாரிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.


ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இந்த ரயில் தயாரிப்பு பணிகள் சென்னையில் உள்ள ஐ.சி.எப் தொழிற்சாலை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

உலகின் தலைசிறந்த ஐந்து ரயில்களில் ஒன்றாக அந்த ரயில் இருக்கும் எனவும், 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவில் ஹைட்ரஜன் ரயில் செயல்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவித்தார்.


Source - Maalai Malar

Similar News