அடுத்த ஆண்டு முதல் மதுரையில் எய்ம்ஸ் மாணவர்களுக்கு வகுப்பு: மருத்துவமனை தலைவர் பேட்டி!
அடுத்த ஆண்டு முதல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ மாணவர்களுக்கு வகுப்புக்கள் துவங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரி இரண்டு ஆண்டுகள் மட்டுமே செயல்படும் அடுத்து ஆண்டு மாணவர்கள் மதுரைக்கு மாற்றப்படுவார்கள் என்று மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் நாகராஜன் தெரிவித்திருக்கிறார். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள் நேற்று ஆய்வு செய்தார். அவருடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல் இயக்குனரும் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான டாக்டர் அனுமந்த்ரா வந்திருந்தார்.
எய்ம்ஸ் மருத்துவ பேராசிரியர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது வகுப்பறைகளை ஆய்வு செய்த பின் ஸ்மார்ட் கிளாஸ் ரூமில் மாணவர்களை சந்தித்தார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்டார் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதி எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது பற்றி அவர் கூறுகையில் வெளிமான் மாநில மாணவர்களிடம் மொழி உணவு சுற்றுச்சூழல் குறித்து கேட்டறிந்தார்.
விடுதி, உணவு வசதிகள் குறித்தும் மாணவர்களிடம் கேட்டிருந்தார். பின்னர் அவர் கூறுகையில் மத்திய மாநில அரசு ஒத்துழைப்புடன் எய்ம்ஸ் மருத்துவ பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படும் பணிகள் விரைந்து விரைவுப் படுத்தப்படும். எய்ம்ஸ் மாணவர்கள் அடுத்த ஆண்டு முதல் மதுரைக்கு மாற்றப்படுவார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.
Input & Image courtesy: Dinamalar News