தி.மு.க. அரசின் ஒத்துழைப்பு இல்லை: கட்டுமான பொருட்கள் கிடைக்காமல் 4 வழிச்சாலை பணிகள் முடக்கம்!
தமிழகத்தில் உள்ள 4 பெரிய நெடுஞ்சாலை பணிகளுக்கு மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் பணிகள் முடங்கியிருப்பதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் உள்ள 4 பெரிய நெடுஞ்சாலை பணிகளுக்கு மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் பணிகள் முடங்கியிருப்பதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறியுள்ளது. மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்த பின்னர் சாலை போக்குவரத்திற்கு அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, தினமும் தேசிய நெடுஞ்சாலைகள் மூலமாக பணிகள் திறம்பட நடைபெற்று வருகிறது. அதே போன்று தமிழக, கேரள எல்லையில் இருந்து கன்னியாகுமரி வரையிலான 4 வழிச்சாலையின் இரண்டு திட்டங்களும், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து வாலாஜாபேட்டை வரையிலான 6 வழிச்சாலை என இரண்டு திட்டங்கள் இதில் அடங்கும்.
மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததார்கள் மண் அள்ள முடியாமல் அவதியுற்று வருகின்றனர். இதற்கு மாநில அரசின் சரியான ஒத்துழைப்பு இல்லாததே கூறப்படுகிறது. குவாரிகளையும் மூடப்பட்டுள்ளதால் ஜல்லிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதே போன்று ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபேட்டை மற்றும் விக்கிரவாண்டி, சோழபுரம் உள்ளிட்ட வழித்தடங்களில் மண் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த ஒப்பந்ததாரர்களும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தமிழக மக்களின் நலனுக்காக மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலை பணிகளை மேற்கொண்டு வரும்போது மாநில அரசு சரியான ஒத்துழைப்பு வழங்காமல் இருப்பது தமிழக மக்களை ஏமாற்றும் செயல் என கூறப்படுகிறது.
சாலை கட்டமைப்பு இருந்தால் மட்டுமே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை எளிதாக கொண்டு செல்ல முடியும். ஏற்கனவே இருக்கின்ற சாலைகளில் போதுமான அகலம் குறைவாக இருப்பதால், மிகப்பெரிய சரக்கு லாரிகள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு சாலைகளை விரிவுப்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்தும்போது திமுக அரசு இது போன்ற பணிகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பது வேடிக்கையாக உள்ளது.
Source: Times Of India
Image Courtesy: The New Indian Express