தமிழகத்தில் இரண்டு கொலைகளை செய்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு - தட்டி தூக்கும் என்.ஐ.ஏ!

Update: 2022-09-29 10:46 GMT

தமிழகத்தில், பிஎஃப்ஐ உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் இரண்டு கொலை வழக்குகளை, தேசிய புலனாய்வு அமைப்பு கையாண்டு வருகிறது.

கோவையில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி நடந்த சசிகுமார் கொலையில், பிஎஃப்ஐ-க்கு தொடர்பு இருப்பது என்ஐஏ விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு தற்போது விசாரணை கட்டத்தில் உள்ளது என என்ஐஏ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிஎஃப்ஐ தொடர்பு கொண்ட இரண்டாவது வழக்கு தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமலிங்கம் கொலை. ராமலிங்கம், திருவிடைமருதூரில் உள்ள பாக்கு விநாயகம் தோப்பு கிராமத்தில் "தங்கள் மதப் பிரச்சார நடவடிக்கையில் தலையிட்டதற்காக" PFI இன் செயல்பாட்டாளர்களால் 5 பிப்ரவரி 2019 அன்று கொல்லப்பட்டார்.

இந்த வழக்கிலும் என்ஐஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து இதுவரை 12 பேரை விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் சந்தேகப்படும் 5 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை, மேலும் அவர்களை பற்றி தகவல் தெரிவித்தால் ஒவ்வொருவருக்கும் 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Input From: DT

Similar News