தமிழகம் முழுவதும் ஏப்ரல் 20ம் தேதி முதல் இரவுநேர ஊரடங்கு அமல்.!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்கள் கொரோனா பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது.

Update: 2021-04-18 13:23 GMT

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்கள் கொரோனா பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது.

அதே போன்று தமிழகத்திலும் தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்து செல்கிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

இதனையடுத்து ஏப்ரல் 20ம் தேதி இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருக்கும்போது, அத்தியாவசிய பணிகளான, மருத்துவம், ஊடகம் மாதிரியான துறையினருக்கும் இந்த ஊரடங்கு பொருந்தாது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Similar News