நீலகிரி மாவட்டத்தில் முககவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை.!

நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் முககவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-03-11 11:51 GMT

நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் முககவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலமாக ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் உள்ளது. ஏற்கெனவே கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் சுற்றுலாப் பயணிகள் பலர் முககவசம் அணியாமல் வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் சென்றது.

இந்நிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது: நீலகிரியில் பொதுமக்கள் முககவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் எனவும், ரூ.200 அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். அதிகரிக்கும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Similar News