நீலகிரியில் பழங்குடியின பெண்கள் நடத்தும் முதல் பெட்ரோல் பங்க்.!

நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின பெண்களே நடத்தும் முதல் பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டுள்ளது.

Update: 2021-07-01 07:27 GMT

நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின பெண்களே நடத்தும் முதல் பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில், கோத்தர், தோடர், இருளர், குரும்பர், காட்டு நாயக்கர் மற்றும் பணியர் என 6 பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வனத்தைப் பற்றி ஆழ்ந்த புரிதல் இருந்தாலும், கல்வி பற்றி விழிப்புணர்வு இல்லாத காணத்தால், பழங்குடியின மக்கள் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றனர்.




 


அதிலும், குறிப்பாக கூடலூர், குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கின்ற பனியர், இருளர், குறும்பர், காட்டுநாயக்கர் பழங்குடியினர் தற்போது விவசாய தினக் கூலிகளாக தங்களின் வாழ்க்கையை நடத்துகின்றனர். இதனிடையே, மத்திய பழங்குடியின நல அமைச்சகம் மற்றும் மாநில ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் உதகை அருகே உள்ள பாலாடா என்ற கிராமத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.

பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள இந்த பெட்ரோல் பங்க் பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தின் அருகாமையில் செலயப்ட தொடங்கியுள்ளது. தமிழகத்திலேயே பழங்குடியின பெண்கள் நடத்தும் முதல் பெட்ரோல் பங்க் இதுவாகும். இதில 6 பழங்குடியினர் பெண்கள் இந்த பெட்ரோல் பங்க்கை நடத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News