கோத்தகிரியில் பொதுமக்களை பயமுறுத்தும் ஒற்றை காட்டெருமை.!

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில நாட்களாக வனவிலங்குகள் நகர் பகுதிகளில் நடமாடி வருகிறது.

Update: 2021-07-12 08:05 GMT

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில நாட்களாக வனவிலங்குகள் நகர் பகுதிகளில் நடமாடி வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் பிரதான சுற்றுலாத்தலமாக ஊட்டி உள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருவது வழக்கம். கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் பலரும் ஊட்டியே நோக்கி படையெடுத்து வருகின்றனர். 


இந்நிலையில், கோத்தகிரி, ராம்சந்த் பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தும் விதமாக ஒற்றை காட்டெருமை உலா வந்ததால் பீதியடைந்துள்ளனர். வனத்துறையினர் உடனடியாக காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

Similar News