‘நிவர்’ புயல் கரையை கடந்து விட்டது.. மீண்டும் 7 மாவட்டங்களில் போக்குவரத்து தொடங்க உத்தரவு.!

‘நிவர்’ புயல் கரையை கடந்து விட்டது.. மீண்டும் 7 மாவட்டங்களில் போக்குவரத்து தொடங்க உத்தரவு.!

Update: 2020-11-26 12:23 GMT

வங்கக்கடலில் உருவான ‘நிவர்’ புயல் நேற்று நள்ளிரவு கரையை கடந்து விட்டது. இதனால் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.இந்த மழையின் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சாலையில் விழுந்துள்ள மரங்களையும் அப்புறப்படுத்தி வருகின்றனர்.


மேலும், கால்நடைகள் பல உயிரிழந்துள்தாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று நெற்பயிர்கள் கடலூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் மழை நீரில் மூழ்கியுள்ளது. எத்தனை ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளன என்பன பற்றி அரசு அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். விரைவில் இதற்கான நிவாரணத்தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.


இந்நிலையில், சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை புதுக்கோட்டை மாவட்டங்களில் கடந்த 24.11.2020 மதியம் 1 மணி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்துகள் சேவை, புயல் தற்போது கரையை கடந்து விட்டதால் இன்று நண்பகல் 12.00 மணி முதல் வழக்கம்போல் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Similar News