நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெறும்.. வானிலை அதிகாரி பரபரப்பு தகவல்.!
நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெறும்.. வானிலை அதிகாரி பரபரப்பு தகவல்.!
புயல் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரி பாலச்சந்திரன் கூறியிருப்பதாவது: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது நாளை புயலாக மாறி நாளை மறுநாள் காரைக்கால்- மகாபலிபுரம் இடையே புதுவைக்கு அருகே கரையை கடக்கக் கூடும். இது தீவிர புயலாக வலுப்பெறும்.
தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்யக்கூடும்.
மேலும், புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 110 கிமீ வரை காற்று வீசும். புயல் கரையை கடக்கும் சமயத்தில் 120 கிமீ வரை காற்று வீசக்கூடும். அது சமயம் 25ம் தேதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளார்.