வெளிநாட்டு ஆர்டர் கிடைக்கவில்லை.. ஓசூரில் ரோஜா மலர் சாகுபடி செய்த விவசாயிகள் கவலை.!

வெளிநாட்டு ஆர்டர் கிடைக்கவில்லை.. ஓசூரில் ரோஜா மலர் சாகுபடி செய்த விவசாயிகள் கவலை.!;

Update: 2021-02-09 10:18 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் ரோஜா மலர்கள் சாகுபடி செய்வதற்கு ஏற்ற தட்ப வெட்ப நிலையை கொண்டுள்ளது. இதனால் ஓசூர் சுற்று வட்டாரங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் அளவில் ரோஜா மலர்கள் சாகுபடி செய்வது வழக்கம். இந்த ஊரில் 35 வகையான ரோஜா மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் ஓசூர் ரோஜாவுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாடத்தின்போதும், சரி வருகின்ற பிப்ரவரி 14 காதலர்கள் தினத்திற்கும் போதுமான ரோஜாக்கள் வியாபாரம் செய்ய முடியவில்லை என்று வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். காதலர் தினம் வரும் பிப்ரவரி மாதத்தில் மட்டும் சுமார் ஒரு கோடி ரோஜா மலர்கள் ஓசூரிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்றால் வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரோஜா சாகுபடி செய்த வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

ரோஜா மலர் விவசாயத்தை நம்பி ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 2 ஆயிரம் விவசாயிகளும், 10,000க்கும் அதிகமான தொழிலாளர்கள் இத்தொழிலை நம்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News