தொட்டாலே உதிரும் தரமற்ற தார் சாலை அமைத்த அரசு ஒப்பந்தக்காரர் - கிராம வாசிகள் புகார்

தரமற்ற தார் சாலை அமைப்பது குறித்து கிராம மக்கள் புகார் மனு கொடுத்தும், எதையும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்.

Update: 2022-04-17 02:28 GMT

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட இண்டமங்கலம் ஊராட்சி P. k பள்ளம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் ராஜிகொட்டாய் முதல் கண்ணர் கரை வரை ரூ.11.65 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. தொடர்ந்து சாலை அமைப்பதற்காக முன்பிருந்த தார் சாலையை JCP எந்திரம் வைத்து பெயர்த்து அப்புறப்படுத்தினர். இதனை தொடர்ந்து புதிய தார் சாலை அமைப்பதற்கு ஜல்லி கற்கள் அமைக்கப்பட்டது. 


மேலும் தற்போது அமைக்கப்பட்டுள்ள புதிய தார்சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பாக இரண்டு அடுக்குகளுக்கு பதிலாக ஒரு மேலடுக்கு தான் தரப்பட்டுள்ளது இதனால் இந்த சாலை போடப்பட்ட இரண்டே நாட்களில் கைகளினால் எடுக்கும் அளவிற்கு சேதமடைந்துள்ளது. மேலும் இதுகுறித்து மக்கள் அந்த டெண்டரில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளிடம் கூறுகையில், அவர்களின் பதிலாக யார் இடம் வேண்டுமானாலும் சொல்லுங்கள். அவர்களுக்கும் 2% கமிஷன் கொடுத்து சரி செய்து விடுவோம் என்று அலட்சியமாக அதிகாரிகள் பதில் கூறி உள்ளார்கள். இதனால் மக்கள் அந்த தார் சாலைகளில் கையால் அப்புறப்படுத்தும் வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது இதனைத்தொடர்ந்து இந்த செய்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சென்றுள்ளது. 


இதற்கு பதிலளிக்கும் விதமாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறுகையில் வரும் திங்கட்கிழமை நேரில் சென்று தார் சாலையை பார்வை விடுவதாகவும், மேலும் புதிய தார் சாலை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறும் என்றும் கூறியுள்ளார்கள். கிராமப்புறத்தில் நடக்கும் பிரச்சினைகளை வீடியோக்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தும் முயற்சிக்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது இதனால் பிரச்சினை எங்கு உள்ளது என்பதையும் வெட்டவெளிச்சமாக காட்டப்படுகிறது. 

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News