சத்துணவு ஊழியர்கள் போராட்டம்... மெழுகு பற்றி ஏந்தி மன்றாடல்... நடந்தது என்ன?

மெழுகுவர்த்தி ஏந்தி சத்துணவு ஊழியர்கள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.

Update: 2023-04-19 00:00 GMT

தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழக அரசிற்கும் அனுப்பப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் தற்பொழுது 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து சத்துணவு பணியாளர்களாக பணிபுரிந்து ஓய்வு பெறும் சத்துணவு பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் அதிகமாக ஒன்பதாயிரம் ஊதியம் வழங்கப்பட வேண்டும். 


அதை DAயை உடன் குடும்ப ஓய்வூதியமாக அரசு உத்தரவு வழங்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறது. மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து சத்துணவு ஊழியர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.இதன் காரணமாக மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.


குறிப்பாக கிராம உதவியாளர்கள் 10 ஆண்டு பணி முடிந்தவுடன் sslc தேர்ச்சி பெற்றவர்களுக்கு கிராம நிர்வாக அலுவலராக பதவி உயர்வு வழங்குவது போல், சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஆண், பெண் என்று பேதம் பார்க்காமல் பதிவு எழுத்தாளராக பதவி உயர்வு வழங்கிட வேண்டும். 10, 20,30 ஆண்டுகள் பணி முடித்த சத்துணவு அமைப்பாளர்களுக்கு முறையான தீர்வு நிலை சிறப்பு நிலை ஊதியமாக 2 ஆண்டுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும். மேலும் காதல் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

Input & Image courtesy: Maalaimalar

Tags:    

Similar News