தமிழகத்தில் வடகிழிக்கு பருவமழை தொடங்கியது! வானிலை மையம் தகவல்!
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை ஆகியவற்றின் மூலமாக அதிக மழை பெய்யும். ஏற்கனவே தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகமான மழை பெய்துள்ளது. மேற்கு பகுதி மாநிலங்கள், மத்திய மற்றும் வட மாநிலங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையால் அதிக மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை சில நாட்களுக்கு முன்புதான் ஓய்ந்துள்ளது.;
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை ஆகியவற்றின் மூலமாக அதிக மழை பெய்யும். ஏற்கனவே தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகமான மழை பெய்துள்ளது. மேற்கு பகுதி மாநிலங்கள், மத்திய மற்றும் வட மாநிலங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையால் அதிக மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை சில நாட்களுக்கு முன்புதான் ஓய்ந்துள்ளது.
வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதத்தில் தொடங்குவது வழக்கம்தான். அதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இப்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது: தமிழகம், புதுச்சேரி, கேரளா, தெற்கு ஆந்திரா ஆகியவற்றில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. மேலும், அக்டோபர் 28ம் தேதி பருவமழை தொடங்கும் என்று அறிவித்துள்ள நிலையில் இன்றே பருவமழை தொடங்க உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Source, Image Courtesy: Maalaimalar