திருச்சியில் கன்னியாஸ்திரியை கர்ப்பமாக்கிய பாதிரியார் - கருவை கலைக்க 3 பாதிரியார்கள் மிரட்டல்!

Update: 2022-12-13 02:53 GMT

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தை சேர்ந்த பெண் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் கன்னியாஸ்திரியாக இருந்தார். திருச்சியில் உள்ள கிறிஸ்தவ மடத்தில் தங்கி இசை பயிற்சி பெற்று வந்தார்.

அப்போது, கல்லூரி முதல்வராக இருந்த பாதிரியார் ராஜரத்தினம் என்பவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.

இதனால் கர்ப்பமான தன்னை, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று கருவை கலைத்ததாகவும், மேலும் 3 பாதிரியார்கள் தன்னை மிரட்டியதாகவும் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில், பாதிரியார் ராஜரத்தினம் மற்றும் கன்னியாஸ்திரியை மிரட்டியதாக புகார் கூறப்பட்ட பாதிரியார்கள் 3 பேர் மற்றும் அவருக்கு கருக்கலைப்பு செய்த தனியார் மருத்துவமனை பெண் டாக்டர் சுசீத்ரா ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

பாதிரியார் ராஜரத்தினம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மற்ற 3 பாதிரியார்கள் மீதான குற்றச்சாட்டுகளை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துவிட்டது. இப்போது கன்னியாஸ்திரிக்கு கருக்கலைப்பு செய்த டாக்டர் மீதான குற்றச்சாட்டுக்கு மட்டும் விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணையில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி, நேரில் ஆஜரானார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடித்துள்ளது. 

Input From: DT



Similar News