ஜெபக்கூடத்தில் அனைவரும் கட்டாயம் பங்கேற்க நிபந்தனை - திருவண்ணாமலை கல்லூரி மாணவிகள் குற்றச்சாட்டு!
கிறிஸ்துவ ஜெப கூடத்தில் அனைத்து கல்லூரி மாணவிகளும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று கூறியதாக மாணவிகள் குற்றச்சாட்டு.
திருவண்ணாமலை மாவட்டம் போளுரை சேர்ந்த பகுதியில் தனியார் நர்சிங் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இது முற்றிலும் கிறிஸ்துவ நர்சிங் கல்லூரி என்பதால், காலையில் தினமும் ஜெபக்கூடம் நடப்பது வழக்கமான ஒன்று. ஆனால் இந்த ஜப கூடத்தில் அனைத்து மாணவிகளும் கட்டாயம் பங்கேற்கும் வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் மாணவிகளை கட்டாயப் படுத்துகிறது. இதன் காரணமாக இந்த கல்லூரியை சேர்ந்த ஏழு மாணவியர் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மனு ஒற்றை தாக்கல் செய்துள்ளார்கள்.
கலெக்டர் இடம் மாணவிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, கல்லூரி நிர்வாகம் மாணவிகள் அனைவரையுமே கட்டாயப்படுத்தி ஜெப கூடத்தில் பங்கேற்க வைப்பதாகவும், அதனால் தாங்கள் மிகவும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் மாணவிகள் கூறியிருக்கிறார்கள். மேலும் நர்சிங் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவிகளுக்கு சரிவர வகுப்புகள் நடத்தவில்லை என்றும், ஆனால் ஞாயிற்றுக்கிழமை என்றவுடன் ஜெபக்கூட்டம் தவறாமல் நடக்கிறது. அதில் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ளுமாறு வற்புறுத்தப்படுகிறார்கள் என்பதையும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
மேலும் ஜெப கூடத்தில் பங்கேற்காத மாணவிகளிடம் ரூபாய் 200 கட்டணமாக வசூலிக்கப் படுவதாகவும் மாணவிகள் கூறியிருக்கிறார்கள். இதன் காரணமாக தங்கள் சொந்த ஊரிலேயே படிப்பை மேற்கொள்வதற்கு கல்லூரி நிர்வாகத்திடமிருந்து தங்களுடைய மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்களை வாங்கித் தருமாறு கலெக்டரிடம் அவர்கள் புகார் அளித்துள்ளார்கள். ஆனால் கல்லூரி இது தரப்பில் இருந்து, நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தி ஜெப கூடத்தில் பங்கிற்குமாறு கூறியது கிடையாது என்று கல்லூரி நிர்வாகம் கூறி இருக்கிறது.
Input & Image courtesy: Dinamalar News