இருளர் இன மக்களின் குடிசைகளைப் பிரித்தெறிந்த விடியல் அரசு!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே இருளர் இன மக்கள் குடிசை அமைத்து வசித்து வந்த நிலையில், அவர்களின் குடிசைகளை வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் சேர்ந்து அகற்றியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரணமல்லூர் முருகன் கோயில் அருகே இருளர் சமூகத்தைச் சேர்ந்த 11 குடும்பத்தினர் கடந்த 4 மாதங்களாக குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். நேற்று அங்கு திடீரென்று சென்ற வந்தவாசி வருவாய்த்துறையினரும், பெரணமல்லூர் காவல் துறையினரும் இருளர் இன மக்களின் குடிசைகளைப் அகற்றினர். முன்அறிவிப்பு இன்றி குடிசைகளை அகற்றியதாக இருளர் இன மக்கள் குற்றம்சாட்டினர். தங்களது குழந்தைகளும் வெட்ட வெளியில் தவித்து வருகிறோம் எனவும் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
மேலும், தங்களுக்கு வீடு கட்டித் தரவேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வட்டாச்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். விரைவில் வீடு கட்டுவதற்கு பட்டா வழங்குவதாக கூறியதை தொடர்ந்து போராட்டத்தை மக்கள் கைவிட்டனர்.
Source, Image Courtesy: Puthiyathalamurai