அரசுக்கு சொந்தமான ரூ.60 கோடி மதிப்பிலான நிலத்தை அபேஸ் செய்த அதிகாரிகள்!

Update: 2022-07-26 08:20 GMT

சென்னை, பூந்தமல்லியில் அரசுக்கு சொந்தமான ரூ.60 கோடி ரூபாய் மதிப்புள்ள 132 சென்ட் நிலத்தை அதிகாரிகளே முறைகேடாக ஆக்கிரமித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூந்தமல்லி வரதராஜபுரத்தில் சர்வே எண் 162ல் ரூ.60 கோடி மதிப்புள்ள 132 சென்ட் நிலத்தை திருப்பெரும்புதூர் வட்டாட்சியருக்கு 1987ம் ஆண்டு கோவிந்தராஜ் நாயுடு என்பவர் பூமி தானமாக வழங்கியதாக போலியான ஆவணங்களை உருவாக்கி பட்டா மாற்றம் செய்து கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் பற்றிய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அயப்பாக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் காசிமாயன் என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றார்.

மேலும், பூமிதான நிலம் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக தற்பபோது வரை பூமிதான துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தமிழ்நாடு நில சீர்திருத்த இயக்குனரக பொது தகவல் வழங்கும் அதிகாரி தகவல் ஒன்றை அளித்திருக்கிறார். ஆனால் தற்போதைய நிலையில் தனிநபருக்கு குறைந்த விலைக்கு போலியான ஆவணங்கள் உருவாக்கி பட்டா மாற்றம் செய்துள்ளார். தற்போது இந்த இடத்தின் மதிப்பு 60 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தமிழக அரசு நிலங்களை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகுளை மீட்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என செய்தி வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Tags:    

Similar News