கோவையில் பழமையான சிவசக்தி சாய் கோவில் இடிப்பு: ஹிந்து முன்னணி எதிர்ப்பு!

கோவையில் மிகவும் பழமையான இந்து கோவில் இடிக்கப்பட்டு இருக்கிறது.

Update: 2023-03-16 02:19 GMT

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் சிவ சக்தி சாய் எனும் கோவில் இருக்கிறது. சுமார் இந்த கோவில் பல ஆண்டுகளாக அந்த பகுதியில் இருந்து வருகிறது. இது போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதன் காரணமாக அப்புறப்படுத்தப்பட்டு இருக்கிறது. இத்தனை வருடங்களாக இருக்கும் கோவில் தற்பொழுதுதான் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பது போல் கூறி கோவை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலை இந்த கோவிலை இடித்து இருக்கிறார்கள். குறிப்பாக இந்த கோவில் பகுதியில் இருக்கும் 25 வருடம் பழமையான சந்தன மரத்தையும், வெட்டி எடுத்து சென்று விட்டார்கள்.


இதைக் கேள்விப்பட்ட ஹிந்து முன்னணியினர் இங்கு குவிந்து இருக்கிறார்கள். அப்பொழுது பேசிய மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ் அவர்கள் கூறும் பொழுது, கோவை மாநகராட்சி தொடர்ந்து ஹிந்து கோவில்களை மட்டும் தான் குறி வைத்து தற்பொழுது இடித்துக் கொண்டு வருகிறது. ரேஸ்கோசில் சத்யா சாய் கோவில் இடிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் தனியார் பள்ளி முன் வாசல் மாநகராட்சி இடம்தான் என்றும் அவர் கூறியிருக்கிறார். அதை இடிக்காமல் கோவிலை மட்டும் இருப்பது எந்த வகையில் நியாயம், மாநகராட்சியின் இடத்தில் தனியார் ஆக்கிரமிப்பு இருக்கலாம்.


ஆனால் இந்து கோவில்களின் ஒரு நிலம் கூட இருக்கக் கூடாது என்பது எத்தகைய வகையில் நியாயம்? நாமும் கோவில்கள் இடிக்கப்பட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். சந்தன மரத்தை வெட்டும் உரிமையை மாநகராட்சிக்கு தற்பொழுது யார் கொடுத்தது? என்று அவர் கேள்வி எழுப்புகிறார். பெரும்பாலும் தி.மு.க ஆட்சிகளில் இந்து கோவில்கள் மீதும் தாக்குதல் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகவே அரங்கேறி வருகிறது.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News