ஒமைக்ரான் தடுப்பு பணிகள்: தமிழகத்திற்கு குழுவை அனுப்பும் மத்திய அரசு!

தென்னாப்பிரிக்காவில் உருவான ஒமைக்ரான் வைரஸ் 70 நாடுகளில் ஆக்கிரமித்தது. அதன் காலடியை இந்தியாவிலும் பதித்துள்ளது. தற்போதைய நிலையில் 17 மாநிலங்களில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2021-12-25 07:22 GMT

தென்னாப்பிரிக்காவில் உருவான ஒமைக்ரான் வைரஸ் 70 நாடுகளில் ஆக்கிரமித்தது. அதன் காலடியை இந்தியாவிலும் பதித்துள்ளது. தற்போதைய நிலையில் 17 மாநிலங்களில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது மற்ற மாநிலங்களுக்கு பரவாமல் இருப்பதற்காக மத்திய சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் முதன் முதலாக கர்நாடகாவில் 2 பேருக்கு கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து நாடு முழுவதிலும் சுமார் 17 மாநிலங்களுக்கு பரவி விட்டது. தற்போது நாடு முழுவதும் 415 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில், இந்தியாவில் தொற்றை கட்டுப்படுத்த அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மறுபுறம் ஒமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது. மேலும், தொற்று அதிகமாக உள்ள 10 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறையின் குழுவினர் வர இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதில் தமிழகம், கேரளா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம், மிசோரம், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு முதற்கட்டமாக மத்திய குழு விரைகிறது. அங்கு பரவி வரும் ஒமைக்ரான் தொற்றின் தன்மை மற்றும் வேகம் பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்படும். என்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்டவைகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Daily Thanthi

Image Courtesy: Mint

Tags:    

Similar News