தமிழகத்தில் ஒமைக்ரான் பரிசோதனைகள் நிறுத்திவைப்பதாக அமைச்சர் அறிவிப்பு!

Update: 2022-01-11 08:13 GMT

தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரிசோதனை தற்போது செய்யப்படவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், தொற்று பாதிக்கப்படுபவர்களில் 85 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகிறது. மீதம் 15 சதவீதம் பேருக்கு டெல்டாவாக உறுதி செய்யப்படுகிறது. மேலும், தமிழகத்தில தினசரி பாதிப்பாக 2000 என்ற அளவில் அதிகரித்து வருகிறது.

மிதமான பாதிப்படைபவர்கள் அதிகம். எனவே ஐசிஎம்ஆர் ஆலோசனைப்படை அவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளலாம். வீட்டில் இருப்பவர்கள் காலை, மாலை ஆகிய இரண்டு வேளைகளும் பல்ஸ் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

Source, Image Courtesy: Puthiyathalaimurai

Tags:    

Similar News