குடிபெயர்ந்தவர்களுக்கு ரேஷன் பொருட்கள் மறுக்கப்படுகிறதா... மத்திய அரசு தீவிர நடவடிக்கை!

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் குடிபெயர்ந்தவர்களுக்கு பொருட்கள் வழங்கும் மறுத்தால் கடும் நடவடிக்கை.

Update: 2023-04-15 04:16 GMT

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்று திட்டம் மத்திய அரசினால் அறிமுகம் செய்யப்பட்ட தற்போது நாடு முழுவதும் இந்த ஒரு திட்டம் இருந்து வருகிறது. இதன் மூலம் குடும்பத்தில் ஒருவர் எங்கு இருந்தாலும் அங்கு இருக்கும் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் அவர் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும் என்பது தான் இதில் உள்ள சிறப்பு அம்சம். ஒருவர் இந்தியாவில் உள்ள எந்த ஒரு நகரங்களில் வசித்தாலும் அவரால் ரேஷன் கார்டுகளை வைத்து தேவையான பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும் என்பது இந்த ஒரு திட்டத்தின் முக்கிய அம்சம். ஆனால் இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு கோளறுபடிகள் நடப்பதாக புகார்கள் எழுந்து இருக்கிறது.


அந்த புகார்களுக்கு தற்பொழுது கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்கள் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் தற்பொழுது சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார். குறிப்பாக அவர் கூறுகையில், ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை என்ற திட்டத்தின் கீழ்எந்த தொழிலாளர்கள் மற்றும் தமிழகத்தின் வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் எந்த பகுதிகளில் இருந்தாலும் அவர்கள் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கிக்கொள்ள வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.


எனினும் இந்த ஒரு திட்டத்தின் கீழ் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுவது இல்லை என்று தொடர்பான புகார்கள் எழுந்து இருக்கிறது. எனவே இந்த திட்டத்தின் கீழ் எந்த ஒரு ரேஷன் கடையில் பொருட்கள் மறுக்கப்படுகிறதோ? அவர்களுக்கு எதிராக புதிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பணியாளர்கள் போதிய அறிவுரைகளை வழங்க வேண்டும் மேலும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் மீது இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டு இருக்கிறது.

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News